என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சசி தரூர்
நீங்கள் தேடியது "சசி தரூர்"
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பாராளுமன்றத்தில் இன்று வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது. பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் போஸ் கொடுத்தனர்.
இதனை பலரும் பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். எழுத்தாளர் வித்யா கிருஷ்ணன் கூறும்போது, "பாராளுமன்றத்தில் உள்ள பெண்கள் உங்கள் பணியிடத்தை "கவர்ச்சிகரமானதாக" மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்" என்று கூறினார்.
இதை தொடர்ந்து சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார்.
அவர் தனது அடுத்த டுவிட்டில் முழு செல்பி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது. அதே உணர்வில் அதை டுவீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சசிதரூர் கூறி உள்ளார்.
பெண் சகாக்களால் லோக்சபாவில் ‘வேலை செய்ய கவர்ச்சிகரமான இடம்’என்ற சசி தரூரின் ட்வீட் மீதான சர்ச்சைக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி தனது சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.
இதையும் படியுங்கள்...டுவிட்டரின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளி நிர்வாகி பராக் அகர்வால் நியமனம்
பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோற்றால் என்ன உணர்வு இருக்குமோ?, அதேபோல்தான் காங்கிரஸ் தோல்வி உள்ளது என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 340-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சியமைக்கிறது. வடமாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் சுருட்டிய பாஜக, தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளது. அதேவேளையில் கேரளாவில் 15 தொகுதிகளுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெற்றிபெறும் தருவாயில் உள்ளார்.
தான் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘என்னுடைய முன்னிலை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. பேட்ஸ்மேன் சதம் அடித்த போதிலும், அவனுடைய அணி தோல்வி அடைந்தால் எப்படி இருக்குமோ? அதே உணர்வுதான் உள்ளது. இந்த கசப்பான எமோசனில் இருந்து வெளியேற சற்று காலம் தேவைப்படும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் அமெரிக்கா செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.#DelhiCourt #ShashiTharoor
புதுடெல்லி:
மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(62), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்த நிலையில் அவரது கணவர் சசி தரூரை தொடர்புப்படுத்தி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதுடன் இவ்வழக்கு முடியும்வரை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் சில கருத்தரங்கங்கள் மற்றும் வேறுசில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என டெல்லி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சசி தரூர் விண்ணப்பித்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் மே 5 முதல் 20-ம் தேதிவரை அவர் வெளிநாடுகளில் பயணிக்க இன்று அனுமதி அளித்தது. #DelhiCourt #ShashiTharoor
திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் துலாபாரம் கொடுத்த போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிதரூர் எம்.பி. நலம்பெற ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். #ShashiTharoor #RajnathSingh
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் துலாபாரம் கொடுத்த போது, தராசின் இரும்பு கம்பி தலையில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரை நேற்று பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவர், சசிதரூர் விரைவில் குணம் பெற வாழ்த்தும் தெரிவித்தார். இதற்கு டுவிட்டர் தளத்தில் சசிதரூர் எம்.பி. நன்றி தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சசிதரூரை மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. #ShashiTharoor #RajnathSingh

துலாபாரம் விழுந்து படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். #ShashiTharoor #NirmalaSitharaman
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளராக திவாகரனும், பாரதிய ஜனதா சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரனும் களத்தில் உள்ளனர். இந்த 3 வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
நேற்று மலையாள வருடப் பிறப்பு என்பதால் கேரளாவில் உள்ள கோவில்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலுக்கு சசிதரூர் சென்றார். அங்கு அவர் வழிபாடு நடத்திவிட்டு தனது எடைக்கு எடை சர்க்கரை துலாபார காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.
இதனால் சசிதரூரின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சசிதரூரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டு அறிந்தார்.
தன்னை நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி சசிதரூர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் ‘இது ஒரு நல்ல அரசியல். தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். #ShashiTharoor #NirmalaSitharaman

இதற்காக தராசின் ஒரு தட்டில் சர்க்கரை வைக்கப்பட்டது. மறு தட்டில் சசிதரூர் அமர்ந்து இருந்த போது தராசின் கொக்கி உடைத்து அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்ததால் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சசிதரூரின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சசிதரூரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டு அறிந்தார்.
தன்னை நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி சசிதரூர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் ‘இது ஒரு நல்ல அரசியல். தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். #ShashiTharoor #NirmalaSitharaman
மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இன்று துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியபோது தராசின் கொக்கி அறுந்து தலையில் விழுந்ததால் படுகாயமடைந்தார். #ShashiTharoor #ShashiTharoorinjuried #thulabharam
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மக்கள் இன்று ‘விஷு’ எனப்படும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில், திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் மந்திரியுமான சசி தரூர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி ‘துலாபாரம்’ செலுத்த வந்திருந்தார்.
‘துலாபாரம்’ தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.
தலையில் இருந்து வேகமாக ரத்தம் வெளியேறியபடி காணப்பட்ட சசி தரூரை அவரது உறவினர்களும், காங்கிரஸ் கட்சியினரும் உடனடியாக காரில் ஏற்றி அருகாமையில் உள்ள திருவனந்தபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டாக்டர்கள் அவர் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டனர்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருமுறை போட்டியிட்டு, வெற்றிபெற்ற சசி தரூர் மூன்றாவது முறையாக இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #ShashiTharoor #ShashiTharoorinjuried #thulabharam
ராகுல் காந்தியைப் போல் கேரளா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடிக்கு துணிச்சல் உண்டா? என மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். #Moditofight #LSpolls #ShashiTharoor
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையில், பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு ஓட்டம் பிடித்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதே கருத்தை பிரதமர் மோடியும் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தது ஏன்? என்பது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர், பிரதமர் மோடிக்கும் துணிச்சல் இருந்தால் ராகுல் காந்தியைப்போல் கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். இதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டன. அதனால், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு பாராளுமன்ற தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் என்ற பதவி, இந்திய மக்கள் அனைவருக்குமே பொதுவான பதவி என்பதை மறந்துவிட்ட மோடி, பாஜகவின் கொள்கைகளை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளார்.
இப்போது, ராகுல் காந்தியின் வருகையால் நமது நாட்டின் பிரதமர் தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற ஆர்வம் இங்குள்ள வாக்காளர்கள் மத்தியிலும் அண்டை மாநில மக்களிடையிலும் அதிகரித்துள்ளது எனவும் சசி தரூர் தெரிவித்தார். #Moditofight #LSpolls #ShashiTharoor
கேரள மீனவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் பரிந்துரை செய்துள்ளார். #ShashiTharoor #NobelpriceRecommendation
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர். இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பணியில் கேரள மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். தங்கள் படகுகள் மூலம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு, வெள்ளத்தில் தத்தளித்து வந்த மக்களை காப்பாற்றினர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கேரள மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர், நார்வே நோபல் குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘கேரள மீனவர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளைக் கொண்டு பல மக்களை போராடி காப்பாற்றினர். இதனால் ஏராளமான படகுகளும் சேதமடைந்தன.
அவர்கள் தங்கள் படகுகள் மட்டுமின்றி, மற்ற ஊர்களில் இருந்தும் படகுகள் ஏற்பாடு செய்து கடல் வழியே கொண்டு வந்து தொடர்ந்து நடக்கும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றனர். நாடெங்கிலும் உள்ள மீனவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பின்தங்கியுள்ளனர். கேரள மீனவர்கள் இதில் விதிவிலக்கு அல்ல. இதற்கிடையில் வெள்ளப்பெருக்கின் போது அவர்களின் இந்த தன்னலமற்ற சேவை சிறந்த கடல் வீரர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றது.
இதையடுத்து புகைப்படம் ஒன்றில், மீனவர் ஒருவர் வெள்ளத்தில் தத்தளித்த வயதானவரை காப்பாற்ற, சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் மண்டியிட்டு அவரை முதுகில் சுமந்துகொண்டு வந்து பாதுகாப்பாக தன் படகில் ஏற்றியது நெகிழச்செய்தது. இப்புகைப்படம் மீனவர்களின் தூய்மையான உள்ளத்தினை பிரதிபலிக்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. #ShashiTharoor #NobelpriceRecommendation

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்த டெல்லி கோர்ட் சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
புதுடெல்லி:
மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் தன்னிடம் அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் சசி தரூர் முறையிட்டிருந்தார். மேலும் இவ்வழக்கில் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ள சில மின்னணு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சமர் விஷால் மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkardeath

ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் தன்னிடம் அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் சசி தரூர் முறையிட்டிருந்தார். மேலும் இவ்வழக்கில் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ள சில மின்னணு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை சசி தரூருக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சமர் விஷால் மறுவிசாரணையை டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தார். #ShashiTharoor #SunandaPushkar #SunandaPushkardeath
மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர் என மோடியை விமர்சித்த முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பாஜக தலைவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். #ShashiTharoor #Congress #BJP #PMModi
புதுடெல்லி:
பெங்களூரு நகரில் சமீபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.
அவரது இந்த சர்ச்சைப் பேச்சை சில ஊடகங்கள் வீடியோ வடிவில் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததுடன் சிவபக்தரான தனது மத உணர்வையும், கோடிக்கணக்கான சிவனடியார்களின் பக்தியையும் இழிவுப்படுத்தி விட்டதாக முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பபர் டெல்லி கோர்ட்டில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். #ShashiTharoor #Congress #BJP #PMModi
ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் குறிப்பிடுகையில், ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது’ என உதாரணம் கூறியதாக சசி தரூர் பேசினார்.

சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் போன்றவர் மோடி. கையாலும் அகற்ற முடியாது, செருப்பாலும் அடிக்க முடியாது என சசி தரூர் வெளியிட்ட கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. #BJPslamsShashiTharoor #comparingModiwithscorpion #scorpionsittingonShivling
புதுடெல்லி:
பெங்களூரு நகரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.
ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் குறிப்பிடுகையில், ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது’ என உதாரணம் கூறியதாக சசி தரூர் பேசினார்.
அவரது இந்த சர்ச்சைப் பேச்சை சில ஊடகங்கள் வீடியோ வடிவில் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘சிவபக்தர் என்று தன்னை கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூரின் கருத்துக்கு பதில் அளிப்பதுடன், இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். #BJPslamsShashiTharoor #comparingModiwithscorpion #scorpionsittingonShivling
ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சசி தரூருக்கு டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #Delhicourt
புதுடெல்லி:
தற்போது ஜெர்மனியில் உள்ள அவர், ஜெனீவா செல்வதற்கு அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஜெனீவா பயணம் மேற்கொள்ள உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சசி தரூரின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கோபி அன்னான் கடந்த சனிக்கிழமை மறைந்ததாக தெரிவித்து, சசி தரூர் பயணம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ஜெனீவா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார். #ShashiTharoor #Delhicourt
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு மனு தாக்க்ல செய்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது.
தற்போது ஜெர்மனியில் உள்ள அவர், ஜெனீவா செல்வதற்கு அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஜெனீவா பயணம் மேற்கொள்ள உள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, சசி தரூரின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கோபி அன்னான் கடந்த சனிக்கிழமை மறைந்ததாக தெரிவித்து, சசி தரூர் பயணம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ஜெனீவா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்தார். #ShashiTharoor #Delhicourt
×

X